Sunday, 28 June 2020

பொதுமறையின் காதலுக்கு என் கவிஉரை

அதிகாரம் 113

தலைவனும் தலைவியும் தத்தம் காதல் மிகுதி கூறுதல்

காதலால் கசிந்துருகும் காதலனும் காதலியும் 

தங்கள் இணையை எண்ணி பாடுவதாக அமைந்திருக்கிறது 

இந்த அதிகாரம்...

1121 முதல் 1125 வரையிலான குறள்கள் தலைவன் தலைவியை எண்ணியும் 

1126 முதல் 1130 வரையிலான குறள்கள் தலைவி தலைவனும் எண்ணியும் 

காதலால் உருகும் குறள்கள்...


பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வால்எயிறு ஊறிய நீர்.                   1121

தேனில் தோய்த மொழியுடையாள்
முத்தாய் ஜொலிக்கும் பல்லுடையாள்
பாலில் தேன் கலந்த அமிழ்தாய்
நீர் சுரக்கும் மாதுளை இதழ்

கொண்ட வாயுடையாள் என் இனியாள்…